Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2023 ஜூன் 19 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரில் ஸ்பெய்ன் சம்பியனானது.
நெதர்லாந்தில் இன்று அதிகாலை நடைபெற்ற குரோஷியாவுடனான இறுதிப் போட்டியில் வென்றே ஸ்பெய்ன் சம்பியனாயிருந்தது.
போட்டியின் வழமையான நேரம், மேலதிக நேரம் எதுவிலும் கோலெதுவும் பெறப்படாத நிலையில் 5-4 என்ற ரீதியில் வென்றே ஸ்பெய்ன் சம்பியனாயிருந்தது.
ஸ்பெய்ன் சார்பாக ஜொசெலு, றொட்றி, மிகேல் மெரினோ, மார்கோ அஸென்ஸியோ ஆகியோர் தமது பெனால்டிகளை உட்செலுத்திய நிலையில், அய்மரிக் லபோர்ட்டேயின் பெனால்டியானது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தது. குரோஷியாவில் நிகொலா விளாசிச், மார்செலோ பிரஸ்னோவிச், லூகா மோட்ரிச், இவான் பெரிசிச் ஆகியோர் தமது பெனால்டிகளை உட்செலுத்திய நிலையில் லொவ்ரோ மஜேரின் பெனால்டியானது ஸ்பெய்ன் கோல் காப்பாளர் உனய் சிமோனால் தடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குரோஷியாவின் புரூனோ பெற்கோவிச் பெனால்டியையும் சிமோன் தடுக்க, ஸ்பெய்னின் டனி கர்வகால் தனது பெனால்டியை உட்செலுத்த 5-4 என்ற ரீதியில் ஸ்பெய்ன் சம்பியனாயிருந்தது.
இதேவேளை மூன்றாமிடத்துக்கான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வென்ற இத்தாலி மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. இத்தாலி சார்பாக, பெடெரிக்கோ டிமார்கோ, டாவிடே பிரட்டேசி, பெடெரிக்கோ சியெஸ்கா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். நெதர்லாந்து சார்பாக, ஸ்டீவன் பேர்ஜ்வைன், ஜோர்ஜினோ விஜ்னால்டும் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago