Shanmugan Murugavel / 2025 மார்ச் 23 , பி.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் நியூசிலாந்து வென்றதோடு, மூன்றாவதை பாகிஸ்தான் வென்றிருந்த நிலையில் மெளன்ட் மகட்டரேயில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற நான்காவது போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை நியூசிலாந்து உறுதி செய்தது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் சல்மான் அக்ஹா, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, பின் அலென்னின் 50 (20), அணித்தலைவர் மிஷெல் பிறேஸ்வெல்லின் ஆட்டமிழக்காத 46 (26), டிம் செய்ஃபேர்ட்டின் 44 (22) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஹரிஸ் றாஃப் 4-0-27-3 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.
பதிலுக்கு 221 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், வில்லியம் ஓ ருர்க், ஜேக்கப் டஃபி (4), ஸகரி போக்ஸ் (3), ஜேம்ஸ் நீஷம், இஷ் சோதியிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 16.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களையே பெற்று 115 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அப்துல் சமட் 44 (30) ஓட்டங்களைப் பெற்றார்.
இப்போட்டியின் நாயகனாக பின் அலென் தெரிவானார்.
12 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
56 minute ago
1 hours ago