2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தொடரைக் கைப்பற்றுமா இலங்கை?

Shanmugan Murugavel   / 2023 ஏப்ரல் 04 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியானது டுனெடினில் நாளை காலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கையணி வென்றிருந்த நிலையில், இலங்கையணியில் பெரும்பாலும் மாற்றமிருக்காதென நம்பப்படுகிறது.

எனினும், நீண்ட காலத்துக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய குசல் பெரேராவிடமிருந்து வேகமாக ஓட்டங்களைப் பெறுவது எதிர்பார்க்கப்படுவதுடன், பதும் நிஸங்க, தனஞ்சய டி சில்வா, அணித்தலைவர் தசுன் ஷானகவிடமிருந்தும் தொடர்ச்சியான பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

பந்துவீச்சுப் பக்கம் டில்ஷான் மதுஷங்கவுக்குப் பதிலாக மதீஷ பத்திரண விளையாடக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

இதேவேளை, நியூசிலாந்து அணியில் கடந்த போட்டியில் விளையாடிய சட் போவ்ஸுக்குப் பதிலாக வில் யங்க் விளையாடக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X