Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mithuna / 2024 ஜனவரி 02 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க, இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கேப் டெளணில் புதன்கிழமை (03) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் தோல்வியடைந்துள்ள இந்தியா, தென்னாபிரிக்காவுக்கு இரண்டாவது போட்டியில் சவாலை அளிப்பதற்கு பந்துவீச்சு, துடுப்பாட்டத்தில் பாரியளவு முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக பந்து அதன் புதிய தன்மையை இழந்த பின்னர் ஓட்டங்களைக் கட்டுப்படுத்தினாலே தென்னாபிரிக்காவுக்கு இந்தியா சவாலை அளிக்கலாம்.
இந்தியாவைப் பொறுத்த வரையில் முதலாவது போட்டியில் விளையாடிய இரவிச்சந்திரன் அஷ்வினுக்குப் பதிலாக இரவீந்திர ஜடேஜா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கமாக தென்னாபிரிக்காவில் காயமடைந்துள்ள அணித்தலைவர் தெம்பா பவுமா மற்றும் ஜெரால்ட் கொயட்ஸியை அணியில் ஸுபைர் ஹம்ஸா, கேஷவ் மஹராஜ் ஆகியோர் பிரதியிடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .