2025 மே 17, சனிக்கிழமை

தொடரைத் தக்க வைக்குமா இங்கிலாந்து?

Freelancer   / 2023 ஜூலை 05 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியானது லீட்ஸில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் அவுஸ்திரேலியா வென்றுள்ள நிலையில் தொடரைத் தக்க வைப்பதற்கு இப்போட்டியை கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் இங்கிலாந்து காணப்படுகின்றது.

அந்தவகையில் இங்கிலாந்து சார்பில் காயமடைந்த ஒலி போப் மற்றும் ஜேம்ஸ் அன்டர்சன், ஜொஷ் டொங்கை மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட் ஆகியோர் பிரதியிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய அணியில் காயமடைந்த நேதன் லையன் மற்றும் ஜொஷ் ஹேசில்வூட்டை டொட் மேர்பி, ஸ்கொட் போலண்ட் ஆகியோர் பிரதியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .