2025 ஜூலை 03, வியாழக்கிழமை

தொடரைத் தக்க வைக்குமா இந்தியா

Editorial   / 2020 பெப்ரவரி 07 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இந்திய அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) நாளை நடைபெறவுள்ளது.

அந்தவகையில், மூன்று போட்டிகள் கொண்ட இரண்டு அணிகளுக்குமிடையிலான இத்தொடரின் முதலாவது போட்டியில் நியூசிலாந்து வென்ற நிலையில், ஒக்லன்டில் இலங்கை நேரப்படி நாளை காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா வென்றாலே தொடரை இந்தியா தக்க வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, கடந்த போட்டியிலேயே ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பிறித்திவி ஷா, மாயங்க் அகர்வால் ஆகியோர் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தபோதும் நீண்ட இனிங்ஸொன்றை விளையாட வேண்டிய அவசியம் காணப்படுகிறது. தவிர, அணித்தலைவர் விராட் கோலி ஓட்டங்களைப் பெற்றபோதும் அவரும் நீண்ட இனிங்ஸொன்றை விளையாட வேண்டியது இந்தியாவுக்கு அத்தியாவசியமாகிறது.

இதேவேளை, பந்துவீச்சுப் பக்கமாக ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் ஆகியோரை முறையே நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சஹால் பிரதியிடும் வாய்ப்புகள் காணப்படுகின்றபோதும் பெரும்பாலும் முதல் போட்டியில் விளையாடிய அதேயணியே களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக, நியூசிலாந்தின் துடுப்பாட்டத்தில் சொல்லிக்கொள்ளத்தக்கதாக குறைகள் எவையும் இல்லாதபோதும் கடந்த போட்டியிலேயே ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அறிமுகத்தை மேற்கொண்டபோதும் அணியில் தொடருவதற்கு டொம் பிளன்டல் பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது. ஏனெனில், நியூசிலாந்துக் குழாமில் ஓட்டங்களைப் பெற்ற மார்க் சப்மன் காணப்படுகின்றார்.

இதேவேளை, பந்துவீச்சு மோசமாகக் காணப்படுகின்ற நிலையில் டிம் செளதியை ஸ்கொட் குக்லஜின், கைல் ஜேமிஸன் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. தவிர, முதலாவது போட்டியில் வெறும் நான்கு ஓவர்களையே இஷ் சோதி வீசியிருந்தமை ஆச்சரியமளித்திருந்த நிலையில், விராட் கோலிக்கு நெருக்கடி கொடுப்பதற்கு அவர் அணியில் இடம்பெற்றால், அவர் மேலும் பயன்படுத்த வேண்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .