2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தோல்வியிலிருந்து மீளுமா இங்கிலாந்து?

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 24 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது, லீட்ஸில் இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இத்தொடரின் முதலாவது போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததுடன், இரண்டாவது போட்டியில் இந்தியா வென்று தொடரில் முன்னிலை வகிக்கின்ற நிலையில், தொடரில் ஆதிக்கம் செலுத்துவதற்கு துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து பாரியளவு முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக இங்கிலாந்தின் அணித்தலைவர் ஜோ றூட் தவிர, ஜொனி பெயார்ஸ்டோ, ஜொஸ் பட்லர், றோறி பேர்ண்ஸ் ஆகியோர் தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிக்காட்ட வேண்டியுள்ளதுடன், ஹசீப் ஹமீட், டேவிட் மலன் ஆகியோர் தமது மீள் தேர்வுகளை நியாயப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

இதுதவிர, கடந்த இரண்டு போட்டிகளிலிலும் பிரகாசித்திருக்காத சாம் கர்ரன், தனது முக்கியத்துவத்தை அணியில் இடம்பெற்றால் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

இந்நிலையில், மார்க் வூட் காயமடைந்துள்ள நிலையில் அவரை சஹிஃப் மஹ்மூட் பிரதிடுவார் என எதிர்பார்க்கப்படுவதோடு, சாம் கர்ரனை கிரேய்க் ஒவெர்ட்டன் பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுபகக்கமாக இந்தியாவின் அணித்தலைவர் விராட் கோலி, உப அணித்தலைவர் அஜின்கியா ரஹானே, செட்டேஸ்வர் புஜாரா ஆகியோரை உள்ளடக்கிய மத்தியவரிசையானது விரைவில் போர்முக்குத் திரும்ப வேண்டியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .