2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தோல்வியிலிருந்து மீளுமா இலங்கை?

Editorial   / 2019 ஒக்டோபர் 29 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி பிறிஸ்பேணில் இலங்கை நேரப்படி நாளை நண்பகல் 1.40 மணிக்கு பிறிஸ்பேணில் ஆரம்பிக்கவுள்ளது.

இத்தொடரின் முதலாவது போட்டியில் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கை வித்தியாசத்தில் தோல்வியைத் தளுவிய இலங்கை, தொடரைத் தக்க வைப்பதற்கு இப்போட்டியை கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் இலங்கையணி இப்போட்டியில் களமிறங்குகின்றது.

முதலாவது போட்டியைப் பொறுத்தவரையில் இமாலய இலக்கொன்றை அவுஸ்திரேலியா நிர்ணயித்ததே இலங்கையணிக்கு தலையிடியாக மாறியிருந்த நிலையில், முதலாவது போட்டியில் ஓட்டங்களை வாரி வழங்கியிருந்த கசுன் ராஜித, வனிடு ஹசரங்க, லக்ஷன் சந்தகான் ஆகியோர் இசுரு உதான, லஹிரு குமார, ஷெகான் ஜெயசூரியவால் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

அந்தவகையில், இனிங்ஸின் ஆரம்பத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அவுஸ்திரேலியாவுக்கு அழுத்தத்தை வழங்கி மீள் எழுச்சியைப் புரிவதற்கு தமது அணித்தலைவர் லசித் மலிங்க, சிரேஷ்ட வீரர் நுவான் பிரதீப்பிடமிருந்து இலங்கை எதிர்பார்க்கின்றது.

துடுப்பாட்டத்திலும் இலங்கையணியின் எந்தவொரு வீரரும் முதலாவது போட்டியில் குறிப்பிடத்தக்கதான பங்களிப்பை வழங்ககியிருக்காதபோதும், முதலாவது போட்டியில் பங்கேற்ற அதே துடுப்பாட்டவரிசையே மீண்டும் களமிறங்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றபோதும் குசல் மென்டிஸை நிரோஷன் டிக்வெல்ல அல்லது அவிஷ்க பெர்ணான்ட்டோ பிரதியிடக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

மறுபக்கமாக, தனது சகோதரரின் திருமணத்தின் காரணமாக இப்போட்டியை அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் மிற்செல் ஸ்டார்க் தவறவிடுகின்ற நிலையில் அவரை பில்லி ஸ்டான்லேக் பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணியில் எதுவித மாற்றமும் இருக்காது எனக் கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .