Shanmugan Murugavel / 2026 ஜனவரி 26 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான நாப்போலியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் வென்றது.
ஜுவென்டஸ் சார்பாக ஜொனதன் டேவிட், கெனான் யில்டிஸ், பிலிப் கொஸ்டிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் தமது மைதானத்தில் இன்று நடைபெற்ற ஏ.சி மிலனுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் றோமா சமப்படுத்தியது. றோமா சார்பாகப் பெறப்பட்ட கோலை லொரென்ஸோ பெல்லகிரினி பெற்றதோடு, மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை கொனி டி வின்டர் பெற்றிருந்தார்.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 52 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தில் இன்டர் மிலன் காணப்படுகின்றது. 47 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தில் ஏ.சி மிலனும், 43 புள்ளிகளை றோமா, நாப்போலி பெற்றுள்ளபோதும் அவற்றுக்கிடையேயான பெறுபேறு காரணமாக மூன்றாம், நான்காமிடங்களில் றோமா, நாப்போலி காணப்படுகின்றன.
3 minute ago
14 minute ago
24 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
14 minute ago
24 minute ago
31 minute ago