Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2022 ஒக்டோபர் 18 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
2022 டி20 உலககோப்பையில் நமிபியாவை வீழ்த்தி நெதர்லாந்து அணி 2வது வெற்றியை பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற நமீபியாஅணி முதலில் துடுப்பாட்டததை தெரிவு செய்தது. இலங்கையை தோற்கடித்த உத்வேகத்துடன் நமிபியா வீரர்கள் இருந்தனர்.
இந்த நிலையில், நமீபியா அணியின் தொடக்க வீரர் திவான் டக் அவுட்டாகி வெளியேறினார். மைக்கேல் வான் நிதானமாக விளையாடி 20 ஓட்டங்களும் கடந்த ஆட்டத்தில் கலக்கிய ஸ்டிபன் பார்ட் 19 ஓட்டங்களும் எடுக்க, ஜென் சிக்கோல் டக் அவுட்டாகி வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து ஜென் பிரைவிங் நிதானமாக விளையாடி48 பந்துகளை பிடித்து 43 ஓட்டங்கள் சேர்த்தார். கேப்டன் எராஸ்மஸ் தன் பங்கிற்கு 16 ஓட்டங்கள் சேர்க்க, நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 121 ஓட்டங்கள் எடுத்தது.
122 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்தும் தடுமாறியது.
தொடக்க வீரர்களான மேக்ஸ் மற்றும் விக்ரமஜித் பொறுப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 59 ஓட்டங்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை அளித்தனர்.
விக்ரமஜித் 39 ஓட்டங்கள் எடுக்க, மேக்ஸ் 35 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தார். எனினும் டாக் குப்பர் உள்ளிட்ட மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது.
இறுதியில் பாஸ் டீ லீட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்கள் எடுக்க நெதர்லாந்து அணி 3 பந்துகள் எஞ்சிய நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளுடன் நெதர்லாந்து 2வது இடத்தை பிடித்துள்ளது. தற்போது நமீபியா அணி யுஏஇ அணியுடன் வெற்றி பெற்றாலே, ரன் ரேட் அடிப்படையில் அந்த அணி சூப்பர் 12 சுற்றுக்கு சென்றுவிடும். இதனால் இலங்கை அணி எஞ்சிய போட்டியில் பெரிய ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்.
16 minute ago
42 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
42 minute ago
54 minute ago