Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2024 ஜூலை 22 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
லங்கா பிறீமியர் லீக்கில் நான்காவது தடவையாக ஜஃப்னா கிங்ஸ் சம்பியனானது.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற கோல் மார்வெல்ஸுடனான இறுதிப் போட்டியில் வென்றே ஜஃப்னா கிங்ஸ் சம்பியனானது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஜஃப்னா கிங்ஸின் அணித்தலைவர் சரித் அசலங்க, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் மார்வெல்ஸ், ஆரம்பத்திலேயே அணித்தலைவர் நிரோஷன் டிக்வெல்ல, அலெக்ஸ் ஹேல்ஸ், ஜனித் லியனகேயை ஜேஸன் பெஹ்ரென்டோர்ஃப் (2), அசித பெர்ணாண்டோவிடம் இழந்து தடுமாறியது.
பின்னர் டிம் செய்ஃபேர்ட்டும், பானுக ராஜபக்ஷவும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய நிலையில் அசித பெர்ணாண்டோவிடம் 47 (37) ஓட்டங்களுடன் செய்ஃபேர்ட் வீழ்ந்தார். அதன் பின்னர் வந்த சஹான் ஆராச்சிகே 16 (14) ஓட்டங்களுடன் அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாயுடன் வீழ்ந்தார்.
இறுதியாக 82 (34) ஓட்டங்களுடன் பானுக ராஜபக்ஷவும் அசித பெர்ணாண்டோவிடம் ஆட்டமிழக்க, டுவைன் பிறிட்டோறியஸின் ஆட்டமிழக்காத 12 (10) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை கோல் மார்வெல்ஸ் பெற்றது.
பதிலுக்கு 185 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஜஃப்னா கிங்ஸ், தமது இனிங்ஸின் முதலாவது பந்திலேயே பதும் நிஸங்கவை பிறிட்டோறியஸிடம் இழந்தபோதும் றைலி றொஸோவின் ஆட்டமிழக்காத 106 (53), குசல் மென்டிஸின் ஆட்டமிழக்காத 72 (40) ஓட்டங்களோடு 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் றொஸோ தெரிவானார்.
3 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
9 hours ago