Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 18 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நடப்புச் சம்பியன்களான பார்சிலோனாவின் மைதானத்தில் நாளை அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் பார்சிலோனாவும், றியல் மட்ரிட்டும் பலப்பரீட்சை நடாத்துகின்றன.
பரமவைரிக் கழகங்களான றியல் மட்ரிட், பார்சிலோனாவுக்கிடையில் நடைபெறும் போட்டிகளானவை எல் கிளாசிகோ என அழைக்கப்படுகின்ற நிலையில், நடப்பு லா லிகா பருவகாலத்தின் முதலாவது எல் கிளாசிகோவாக இப்போட்டி நடைபெறுகிறது.
உண்மையாக இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் நடைபெறவிருந்த இப்போட்டியானது கட்டலோனிய ஆர்ப்பாட்டங்களால் ஒத்தி வைக்கப்பட்டு நாளை நடைபெறுகிறது.
அந்தவகையில், வழமையான எல் கிளாசிகோ போட்டிகள் போல் போல இது முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. ஏனெனில், ஒக்டோபர் மாதம் போட்டி நடைபெற்றிருக்கும் பட்சத்தில், றியல் மட்ரிட்டின் முகாமையாளர் ஸினடி ஸிடன் அல்லது பார்சிலோனாவின் முகாமையாளர் எர்னெஸ்டோ வல்வேர்டேயின் பதவிக்கு ஆப்பு வைக்கும் போட்டியாக இப்போட்டி அமைந்திருக்கும்.
நடப்பு லா லிகா பருவகாலத்தின் ஆரம்பத்தில் காயம் காரணமாக தமது அணித்தலைவரும், நட்சத்திர முன்களவீரருமான லியனல் மெஸ்ஸியை பார்சிலோனா இழந்த நிலையில் அவ்வணியும், றியல் மட்ரிட்டும் தடுமாற்றத்தை வெளிப்படுத்தியிருந்தன. ஆக, வழமை போன்று குறித்த போட்டியில் தோற்கும் அணியின் முகாமையாளரின் பதவி பறிபோகக்கூடிய ஆபத்து காணப்பட்டிருந்தது.
எனினும், தற்போதைய நிலையைப் பொறுத்தவரையில் இரண்டு அணிகளினதும் பெறுபேறுகள் மேம்பட்டு, லா லிகா புள்ளிகள் தரவரிசையில் முதலாம், இரண்டாம் இடங்களில் காணப்படுகின்றன. தலா 35 புள்ளிகளையே இரண்டு அணிகளும் பெற்றுள்ளபோதும், கோலெண்ணிக்கை வித்தியாசத்தின் அடிப்படையில் முதலாமிடத்தில் பார்சிலோனாவும், இரண்டாமிடத்தில் றியல் மட்ரிட்டும் காணப்படுகின்றன.
இந்நிலையில், எவ்வாறு இருந்தபோதிலும் இப்போட்டியின் வெற்றியாளர் லா லிகா புள்ளிகள் பட்டியலில் முதலாமிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பைக் கொண்டிருக்கின்ற நிலையில் இப்போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.
அந்தவகையில், லியனல் மெஸ்ஸியுடன், லூயிஸ் சுவாரஸ், அன்டோனி கிறீஸ்மன் என்ற முன்வரிசையுடன் களமிறங்க எதிர்பார்த்திருக்கும் பார்சிலோனாவே இப்போட்டியில் வெல்வதற்கான அதிகளவு வாய்ப்புகளைக் கொண்டிருந்தாலும், றொட்றிகோ, வின்சியஸ் ஜூனியருடன் கரிம் பென்ஸீமாவையும், மத்தியகளத்தில் வளர்ந்துவரும் பெடெரிக்கோ வல்வேர்டேயையும் கொண்ட றியல் மட்ரிட்டானது பார்சிலோனாவுக்கு அதிர்ச்சியளித்தாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை.
லா லிகாவைப் பொறுத்தவரையில் இரண்டு அணிகளும் தற்போது தலா 72 வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில், கடந்த ஆறு லா லிகா எல் கிளாசிகோ சந்திப்புகளிலும் றியல் மட்ரிட் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு போட்டிகளை சமநிலையில் முடித்திருந்த றியல் மட்ரிட், நான்கு போட்டிகளில் தோற்றிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago
03 Jul 2025