2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நியூசிலாந்துக்கெதிரான இலங்கையின் 2ஆவது டெஸ்ட் நாளை:

Editorial   / 2018 டிசெம்பர் 25 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இலங்கையணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கையணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், இளம் வீரர் குசல் மென்டிஸ் ஆகியோர் வெளிப்படுத்திய சிறப்பான பெறுபேறு காரணமாக அப்போட்டியை வெற்றிதோல்வியின்றி இலங்கை முடித்துக் கொண்ட நிலையில், கிறைஸ்ட்சேர்ச்சில் இரண்டாவது டெஸ்ட், இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அந்தவகையில், முதலாவது டெஸ்டில் விட்ட இடத்திலிருந்து தமது பெறுபேற்றை இலங்கை தொடருமானால் தொடரை வெல்லக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அதற்கு அஞ்சலோ மத்தியூஸ், குசல் மென்டிஸிடமிருந்து மீண்டும் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, அணித்தலைவர் தினேஷ் சந்திமால், உப அணித்தலைவர் திமுத் கருணாரத்ன ஆகியோரிடமிருந்தும் கூட்டிணைவான ஒரு பங்களிப்பு தேவைப்படுகின்றது.

இதுதவிர, களத்தடுப்புப் பக்கமும் இலங்கை முன்னேற வேண்டிய நிலையில் காணப்படுவதுடன், எவ்வாறாகவும் நியூசிலாந்தின் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றக்கூடிய பந்துவீச்சுக் குழாமையும் கொண்டிருக்க வேண்டும். அந்தவகையில், முதலாவது டெஸ்டில் வேகமாக பந்துவீசி விக்கெட்டுகளை வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார கைப்பற்றியிருந்த நிலையில், இலங்கைக் குழாமிலுள்ள இன்னொரு வேகமாக பந்துவீசக்கூடிய வேகப்பந்துவீச்சாளரான துஷ்மந்த சமீரவை வேகப்பந்துவீச்சாளர் கசுன் ராஜிதவுக்கு பதிலாக களமிறக்கும் வாய்ப்புகள் காணப்படுகிறது.

குறித்த ஒரு மாற்றம் மட்டுமே முதலாவது டெஸ்டில் விளையாடிய இலங்கையணியிலிருந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு, தட்டையான ஆடுகளத்தில் கசுன் ராஜித விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக்காத நிலையில், முதலாவது போட்டியில் விளையாடிய அதேயணியே இப்போட்டியிலும் களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை.

மறுபக்கமாக, நியூசிலாந்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு குறைபாடுகளெவையும் காணப்படாத நிலையில், முதலாவது டெஸ்டில் விளையாடிய அதேயணியே இரண்டாவது டெஸ்டிலும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரிதாக, சில சந்தர்ப்பங்களில் வேகப்பந்துவீச்சாளர் நீல் வக்னருக்குப் பதிலாக இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் மற் ஹென்றி களமிறங்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. எவ்வாறாயினும் முதலாவது டெஸ்டில் விளையாடிய அதேயணியே களமிறங்குவதற்கான வாய்ப்புகளே பெரும்பாலாகக் காணப்படுகின்றன.

இந்நிலையில், முதலாவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்டுக்கான ஆடுகளம் கவனம் பெறுகின்ற நிலையில், இது முதலாவது டெஸ்டை விட வேகமானதாகவும் முடிவைத் தரக்கூடியதாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .