Shanmugan Murugavel / 2022 நவம்பர் 23 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் முடிவேதும் பெறப்படாததோடு, இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றிருந்ததோடு, நேற்று நேப்பியரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியானது மழை காரணமாக டக்வேர்த் லூயிஸ் முறைப்படி சமநிலையான நிலையிலேயே 1-0 என தொடரை இந்தியா கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
நியூசிலாந்து: 160/10 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: டெவொன் கொன்வே 59 (49), கிளென் பிலிப்ஸ் 54 (33) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 4/17 [4], அர்ஷ்டீப் சிங்க் 4/37 [4], ஹர்ஷால் பட்டேல் 1/28 [3.4], தீபக் ஹூடா 0/3 [1])
இந்தியா: 75/4 (9 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹர்டிக் பாண்டியா ஆ.இ 30 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 2/27 [3], இஷ் சோதி 1/12 [2], மிற்செல் சான்ட்னெர் 0/5 [1], லொக்கி பெர்கியூசன் 0/8 [1])
போட்டியின் நாயகன்: மொஹமட் சிராஜ்
தொடரின் நாயகன்: சூரியகுமார் யாதவ்
10 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026