2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

நியூசிலாந்தை வீழ்த்துமா இலங்கை?

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 17 , பி.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது காலியில் நாளை காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்டுடன் ஆரம்பிக்கிறது.

சொந்த மண்ணிலேயே இலங்கை பலமானதாகக் காணப்பட்டாலும் நியூசிலாந்து இலங்கைக்கு பலத்த சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினேஷ் சந்திமாலின் உபாதை முழுமையாகக் குணமடையாத நிலையில் குசல் மென்டிஸ் விக்கெட் காப்பாளராக ஏழாமிடத்தில் களமிறங்கவுள்ளார். சந்திமால் மூன்றாமிடத்தில் களமிறங்க, கமிந்து மென்டிஸ் ஐந்தாமிடத்தில் களமிறங்கவுள்ளார்.

பந்துவீச்சாளர்களில் அசித பெர்ணாண்டோ, பிரபாத் ஜெயசூரியவுடன் ரமேஷ் மென்டிஸ், லஹிரு குமார களமிறங்குகின்றனர்.  

மறுபக்கமாக நியூசிலாந்தைப் பொறுத்த வரையில் மற் ஹென்றி, வில்லியம் ஓ ருர்கே, அஜாஸ் பட்டேல், மிற்செல் சான்ட்னெர் ஆகியோர் கிளென் பிலிப்ஸ் மற்றும் றஷின் றவீந்திரவுடன் டிம் செளதி இல்லாமல் களமிறங்கும் சந்தர்ப்பமும் காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X