Shanmugan Murugavel / 2022 டிசெம்பர் 26 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, கராச்சியில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
இங்கிலாந்து அணியால் வெள்ளையடிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணியானது உடனடியாக சுதாகரித்துக் கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக துடுப்பாட்டத்தில் பலத்தளவு முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டியுள்ள நிலையில் சிரேஷ்ட வீரர்களான மொஹமட் றிஸ்வான், ஷண் மசூட்டிடமிருந்து மேம்பட்ட பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படுகின்றது.
மறுபக்கமான கேன் வில்லியம்ஸன் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ள இந்த முதலாவது டெஸ்ட் தொடரில், டிம் செளதி எவ்வாறு செயற்படப் போகின்றார் என்பது நிச்சயம் அவதானிக்கப்படும்.
அஜாஸ் பட்டேலுடன் இரண்டாவது சுழற்பந்துவீச்சாளராக விக்கெட்டுகளைக் கைப்பற்றக்கூடிய இஷ் சோதி அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவிர, வில்லியம்ஸன், டொம் லேதம், ஹென்றி நிக்கொல்ஸ், டெவொன் கொன்வே, டரைல் மிற்செல், டொம் பிளன்டலிருந்து தொடர்ச்சியான துடுப்பாட்டப் பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படும்.
7 minute ago
11 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
14 minute ago