2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நியூசிலாந்தை வென்று இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2022 நவம்பர் 09 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.

சிட்னியில் இன்று நடைபெற்ற நியூசிலாந்துடனான அரையிறுதிப் போட்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, முதலாவது ஓவரிலேயே ஷகீன் ஷா அஃப்ரிடியிடம் பின் அலெனை இழந்தது. பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் டெவோன் கொன்வே ரண் அவுட்டானானதுடன், அடுத்து வந்த கிளென் பிலிப்ஸும் சிறிது நேரத்திலேயே மொஹமட் நவாஸிடம் வீழ்ந்தார்.

இந்நிலையில் வில்லியம்ஸின் 46 (42), டரைல் மிற்செல்லின் ஆட்டமிழக்காத 53 (35) ஓட்டங்களுடன் இனிங்ஸை நகர்த்திய நியூசிலாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது. அப்ரிடி 4-0-24-2, மொஹமட் நவாஸ் 2-0-12-1, நசீம் ஷா 4-0-30-0, மொஹமட் வஸிம் 2-0-15-0, ஹரிஸ் றாஃப் 4-0-32-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 153 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், மொஹமட் றிஸ்வானின் 57 (43), பாபர் அஸாமின் 53 (42), மொஹமட் ஹரிஸின் 30 (26) ஓட்டங்களோடு 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், மிற்செல் சான்ட்னெர் 4-0-26-1, இஷ் சோதி 4-0-26-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக றிஸ்வான் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .