2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நெதர்லாந்தை வீழ்த்திய இலங்கை

Shanmugan Murugavel   / 2023 ஜூலை 10 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், ஹராரேயில் நேற்று நடைபெற்ற நெதர்லாந்து உடனான இறுதிப் போட்டியில் இலங்கை வென்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நெதர்லாந்தின் அணித்தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ், முதலில் இலங்கையைத் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை விக்ரம்ஜிட் சிங்க் (2), சஹிப் சுல்ஃபிஹார் (2), லோகன் வான் பீக் (2), றயான் கிளெய்ன் (2), அர்யன் டுட்டிடம் குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த நிலையில், சஹான் ஆராச்சிகேயின் 57 (71), குசல் மென்டிஸின் 43 (52), சரித் அஸலங்கவின் 36 (36), வனிடு ஹஸரங்கவின் 29 (21) ஓட்டங்களோடு 47.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 233 ஓட்டங்களையே பெற்றது.

பதிலுக்கு 234 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து,  டில்ஷான் மதுஷங்க (3), வனிடு ஹஸரங்க (2), மகேஷ் தீக்‌ஷனவிடம் (4) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 23.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களையே பெற்று 128 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக மதுஷங்கவும், தொடரின் நாயகனாக ஷோன் வில்லியம்ஸும் தெரிவாகினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X