Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 18 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
போட்டி அதிகாரிகளை அவமானப்படுத்தியதற்காக பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரர் நெய்மர் கொண்டிருந்த மூன்று போட்டி ஐரோப்பியத் தடையானது, விளையாட்டுக்கான தீர்ப்பாயத்தால் இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், நாளை அதிகாலை இடம்பெற்ற ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டுடனான போட்டியையும், துருக்கியக் கழகமான கலட்டாசராயுடனான போட்டியையுமே நெய்மர் தவறவிடவுள்ளதுடன், பெல்ஜியக் கழகமான கிளப் ப்ரூகேயுடன் அடுத்த மாதம் 22ஆம் திகதி இடம்பெறவுள்ள போட்டியில் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து தமது சொந்த மைதானத்தில் இவ்வாண்டு மார்ச் மாதம் ஆறாம் திகதி இடம்பெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டுடனான போட்டியுடன் வெளியேறியதைத் தொடர்ந்தே ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தால் நெய்மர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.
பரிஸ் ஸா ஜெர்மைனின் மேன்முறையீட்டை ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியம் நிராகரித்தத்தைத் தொடர்ந்தே குறித்த விடயத்தை விளையாட்டுக்கான தீர்ப்பாயத்திடம் பரிஸ் ஸா ஜெர்மைன் எடுத்துச் சென்றிருந்தது.
இறுதி 16 அணிகளுக்கிடையேயான இரண்டாவது சுற்றுப் போட்டியின் தீர்மானமிக்க 94ஆவது நிமிட மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கான பெனால்டியை வழங்க எடுத்த முடிவை அவமானம் என அழைத்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago