Editorial / 2025 மார்ச் 14 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் 2025ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டு போட்டி நோர்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்றது.
  வித்தியாலயத்தின் அதிபர் பி.முத்துலிங்கம் தலைமையிலும் உடற் கல்வி ஆசிரியர் எஸ்.ஸ்ரீகுமார் வழிகாட்டலிலும் நடைபெற்றதுடன் இந்நிகழ்விற்கு ஹட்டன் வலய கல்விப் பணிப்பாளர் ஆர். விஜேந்திரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இல்ல விளையாட்டு போட்டியில் முதலாம் இடத்தை வளவை இல்லம் இரண்டாம் இடத்தை களனி இல்லமும் மூன்றாம் இடத்தை மகாவலி இல்லமும் பெற்றுக் கொண்டது. 
விளையாட்டு போட்டிக்கு கோட்டம் இரண்டின் கோட்டக் கல்விப் பணிப்பாளர் உட்பட்ட கல்வி புலத்தின் உத்தியோகத்தர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிற்பித்தமை குறிப்பிடத்தக்கது.
ஆர்.ரஞ்சன்





அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .