2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

பிறீமியர் லீக் பட்டத்தை கைப்பற்ற லெய்செஸ்டருக்கு ஒரு வெற்றியே தேவை

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 26 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் பட்டத்தை கைப்பற்றுவதற்கு லெய்செஸ்டர் சிற்றி அணிக்கு ஒரு வெற்றி மட்டுமே தேவையாக உள்ளது.

பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்திலுள்ள டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ், வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் ஆகிய அணிகளுக்கிடையே கடந்த திங்கட்கிழமை (25) இடம்பெற்ற போட்டி. 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலையில் முடிந்த நிலையிலேயே மேற்படி சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மிகுதியாகவுள்ள மூன்று போட்டிகளில், ஏதாவது ஒன்றில் லெய்செஸ்டர் சிற்றி வெற்றி பெற்றால் அவ்வணி வரலாற்றில் முதன்முறையாக பிறீமியர் லீக் பட்டத்தை கைப்பற்ற முடியும். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (01), மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் மைதானமான ஓல்ட் ட்ராபோர்ட்டில் அவ்வணியுடான போட்டியில் வெற்றி பெற்றால் பிறீமியர் லீக் பட்டத்தை லெய்செஸ்டர் சிற்றி பெற்றுக் கொள்ள முடியும்.

எவ்வாறெனினும் முறையற்ற நடத்தை காரணமாக மேலுமொரு போட்டித் தடை விதிக்கப்பட்ட லெய்செஸ்டர் சிற்றியின் நட்சத்திரவீரர் ஜேமி வர்டி, மன்செஸ்டர் யுனைட்டெட்டுடடான போட்டியிலும் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ், எஞ்சியிருக்கும் தனது மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று மற்றையதை சமநிலையில் முடித்துக் கொண்டால் பிறீமியர் லீக் பட்டத்தை கைப்பற்றுவதற்கான சிறிய வாய்ப்பு உள்ளது.

பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில், 76 புள்ளிகளுடன் லெய்செஸ்டர் சிற்றி முதலிடத்தில் இருக்கின்ற நிலையில், ஏழு புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ள டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் அடுத்த இடத்தில் உள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .