2025 மே 15, வியாழக்கிழமை

பங்களாதேஷை வீழ்த்தியது இலங்கை

Shanmugan Murugavel   / 2024 மார்ச் 25 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்டை இலங்கை வென்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், சியல்ஹெட்டில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியின் இன்றைய நான்காம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 47 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பங்களாதேஷ் கசுன் ராஜித (4), லஹிரு குமாரவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 182 ஓட்டங்களையே பெற்று 328 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. மொமினுல் ஹக் ஆட்டமிழக்காமல் 87, மெஹிடி ஹஸன் மிராஸ் 33 ஓட்டங்களைப் பெற்றனர்.

இப்போட்டியின் நாயகனாக தனஞ்சய டி சில்வா தெரிவானார்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

இலங்கை: 280/10 (துடுப்பாட்டம்: தனஞ்சய டி சில்வா 102, கமிந்து மென்டிஸ் 102 ஓட்டங்கள். பந்துவீச்சு: காலிட் அஹ்மட் 3/72, நஹிட் ரானா 3/87, தஜியுல் இஸ்லாம் 1/31, ஷொரிஃபுல் இஸ்லாம் 1/59)

பங்களாதேஷ்: 188/10 (துடுப்பாட்டம்: தஜியுல் இஸ்லாம் 47, லிட்டன் தாஸ் 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: விஷ்வ பெர்ணாண்டோ 4/48, லஹிரு குமார 3/31, கசுன் ராஜித 3/56)

இலங்கை: 418/10 (துடுப்பாட்டம்: கமிந்து மென்டிஸ் 164, தனஞ்சய டி சில்வா 108, திமுத் கருணாரத்ன 52, பிரபாத் ஜெயசூரிய 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: மெஹிடி ஹஸன் மிராஸ் 4/74, தஜியுல் இஸ்லாம் 2/75, நஹிட் ரானா 2/128, காலிட் அஹ்மட் 1/46, ஷொரிஃபுல் இஸ்லாம் 1/75)

பங்களாதேஷ்: 182/10 (துடுப்பாட்டம்: மொமினுல் ஹக் ஆ.இ 87, மெஹிடி ஹஸன் மிராஸ் 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: கசுன் ராஜித 5/56, விஷ்வ பெர்ணாண்டோ 3/36, லஹிரு குமார 2/39)

போட்டியின் நாயகன்: தனஞ்சய டி சில்வா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .