Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 06 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷுக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் டக் வேர்த் லூயிஸ் முறைப்படி 17 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் வென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், சட்டோகிராமில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தானின் அணித்தலைவர் ஹஷ்மத்துல்லாஹ் ஷகிடி, பங்களாதேஷை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், மழையால் பாதிக்கப்பட்டு போட்டி 43 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்ட நிலையில் பஸல்ஹக் பரூக்கி (3), முஜீப் உர் ரஹ்மான் (2), அஸ்மத்துலாஹ் ஓமர்ஸாய், ரஷீட் கான் (2), மொஹமட் நபியிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 43 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், தெளஹிட் ஹிரிடோய் 51 (69) ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு ஆப்கானிஸ்தான் துடுப்பெடுத்தாடும்போது 21.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 83 ஓட்டங்களை பெற்றிருக்கும்போது மழை குறுக்கிட்ட நிலையிலேயே அப்போது டக் வேர்த் லூயிஸ் முறைப்படி முன்னிலையில் இருந்த ஆப்கானிஸ்தான் வென்றது. துடுப்பாட்டத்தில், இப்ராஹிம் ஸட்ரான் ஆட்டமிழக்காமல் 41 (58) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், ஷகிப் அல் ஹஸன், தஸ்கின் அஹ்மட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக பஸல்ஹக் பரூக்கி தெரிவானார்.
இரண்டு அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டியானது வௌ்ளிக்கிழமை(07) பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
44 minute ago
2 hours ago
4 hours ago