Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 13 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, மிர்பூரில் இலங்கை நேரப்படி இன்று மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியுடன் தொடங்குகின்றது.
ஆப்கானிஸ்தானுடனான ஒற்றை டெஸ்ட் போட்டியில் தோற்றது, இலங்கைக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் மோசமான செயற்பாடு, உலகக் கிண்ணத்தில் எதிர்பார்த்தளவில் பிரகாசிக்காமையால் அழுத்தத்தை எதிர்நோக்கியுள்ள பங்களாதேஷ் தம்மீதான அழுத்தத்தை ஓரளவுக்கேனும் குறைப்பதற்கு இத்தொடரிலாவது சம்பியனாகவேண்டிக் காணப்படுகின்றது.
இதற்கு முஸ்தபிசூர் ரஹ்மானின் மீள்வருகை பங்களாதேஷுக்கு பலத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அணித்தலைவர் ஷகிப் அல் ஹஸன், முன்னாள் அணித்தலைவர்கள் முஷ்பிக்கூர் ரஹீம், மகமதுல்லா ஆகியோரின் துடுப்பாட்டம் பங்களாதேஷுக்குத் தேவையானதாகக் காணப்படுகின்றது. தவிர இளம் வீரர்களாக லிட்டன் தாஸ், செளமியா சர்கார், மொஷாடெக் ஹொஸைன், சபீர் ரஹ்மான் ஆகியோரிடமிருந்தும் தொடர்ச்சியான பெறுபேற்றை பங்களாதேஷ் எதிர்பார்க்கின்றது.
ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரையில் ஒற்றை டெஸ்ட்டில் வென்று தன்னம்பிக்கையுடன் இருக்கையில் அணித்தலைவர் ரஷீட் கான், முன்னாள் அணித்தலைவர்கள் மொஹமட் நபி, அஸ்கர் ஆப்கானோடு, முஜீப் உர் ரஹ்மான், ஹஸரத்துல்லா ஸஸாய், நஜிபுல்லா ஸட்ரான் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்களாக விளங்குகின்றனர்.
இதேவேளை, சிம்பாப்வேயைப் பொறுத்த வரையில் சர்வதேச கிரிக்கெட் சபையிலிருந்து அண்மையில் தடையை எதிர்நோக்கியுள்ள நிலையில், பெறுபேறுகள் மூலமாகவே தங்களை வெளிப்படுத்தவேண்டியவர்களாகக் காணப்படுகின்ற நிலையில், இத்தொடருடன் ஓய்வுபெறவுள்ள சிம்பாப்வேயின் அணித்தலைவர் ஹமில்டன் மஸகட்ஸா மற்றும் முன்னாள் அணித்தலைவர் பிரண்டன் டெய்லர், ஷோன் வில்லியம்ஸ், கிரேய்க் எர்வின் ஆகியோர் முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
27 minute ago
04 Jul 2025