2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

படகுபோட்டி மற்றும் மாண்டுவண்டில் சவாரி

Freelancer   / 2023 ஏப்ரல் 10 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ்- சிங்கள புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு வற்றாப்பளை கண்ணகி மாட்டுவண்டில் சவாரி சங்கத்தினர் நடத்தும் புத்தாண்டு விளையாட்டு போட்டிகள் கடந்த 08.04.2022 அன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் நடைபெற்றுள்ளன.
 
காலைநேர போட்டியா நந்திக்கடலில் படகு(குள்ளா) போட்டி நடைபெற்றுள்ளது. இந்த படகு போட்டியில் நந்திக்கடல் மற்றும் நன்நீர் மீனவர்களின் 11 படகுகள் போட்டியில் கலந்து கொண்டுள்ளன.
படகு போட்டியினை முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் வைத்தியகலாநிதியுமான சி.சிவமோகன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு தொடக்கிவைத்துள்ளார்.

நந்திக்கடலில் முதல் முதலாக இந்த படகு போட்டி நடைபெற்றுள்ளமை நன்னீர் மீன்பிடி சங்கங்களின் படகு உரிமையளார்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது
 
இந்த படகுபோட்டியில் முதல் இரண்டு இடங்களையும் முத்தையன் கட்டு நன்னீர் மீன்பிடி சங்கத்தினை சேர்ந்த படகு உரிமையாளர்கள் பெற்றுக்கொண்டுள்ளதுடன் மூன்றாவது இடத்தினை வற்றாப்பனை மீனவ  சங்கத்தின் படகு பெற்றுக்கொண்டுள்ளது முதல் இடத்தினை பெற்றவருக்கு ஒரு இலம்சம் ரூபாவும்,2 ஆம் இடத்தினை பெற்ற படகிற்கு 50 ஆயிரம் ரூபாவும் 3 ஆம் இடத்தினை பெற்ற படகிற்கு 25 ஆயிரம் ரூபாவும் பரிசாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

மாலை நிகழ்வுகளாக வடமாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்திய மாட்டுவண்டில் சாவரி போட்டியும் கைத்தறியில் மாடுகொண்டு ஓடுதல் போட்டியும்  சிறப்புற நடைபெற்றுள்ளது.

மாண்டு வண்டில் சவாரிகள் 5 பிரிவுகளாக நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களையும் பெற்ற  மாட்டு வண்டில்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
                                                                                                                                              செ.கீதாஞசன்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .