Shanmugan Murugavel / 2015 நவம்பர் 10 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்செஸ்டர் யுனைட்டட், எவேர்ட்டன் அணிகளின் முன்னாள் முகாமையாளரான டேவிட் மோயஸ், தனது ஸ்பானிய கழகத்தின் பயிற்றுவிப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
றியல் சோயிடாட் கழகத்தின் பயிற்றுநராக நவம்பர் 10, 2014 இல் நியமிக்கப்பட்ட டேவிட் மோயஸ், தனது கழகத்தில் ஒரு வருடப் பூர்த்தியை நிறைவுசெய்வதற்கு ஒரு நாள் முன்னதாக, பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது உதவிப் பயிற்றுநரும், பதவியை இழந்துள்ளார்.
லா லிகா போட்டிகளில், 2014ஃ15 பருவகாலத்தில், 27 போட்டிகளில் 9 போட்டிகளை வென்று, 10 போட்டிகளை சமநிலைப்படுத்தி, சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தியிருந்தார். அக்கழகமும், 12ஆவது இடத்தைப் பெற்றிருந்தது.
எனினும், ஸ்பானிய மொழியைக் கற்பதற்கு அவர் தடுமாறியதன் காரணமாக, தொடர்பாடலில் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. தவிர, தனக்கான சொந்தமான வசிப்பிடத்தை வாங்கவோ, வாடகைக்குப் பெறவோ இல்லை, மாறாக, ஹொட்டலிலேயே வசித்து வந்தார். இது, கழகத்துக்குப் பிரச்சினையானதாக இருந்துவந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
டேவிட் மோயஸ், 9 மாதங்கள் மாத்திரமே மன்செஸ்டர் யுனைட்டட் அணியின் முகாமையாளராக இருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .