Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையால் பத்தாண்டுகளில் சிறந்த வீரராக இந்திய அணித்தலைவர் விராட் கோலியும், அவுஸ்திரேலிய சகலதுறை வீராங்கனை எலைஸ் பெரியும் தெரிவாகியுள்ளனர்.
விருதுக்கான காலப்பகுதியில், சர்வதேசப் போட்டிகளில் 20,396 ஓட்டங்களை கோலி குவித்திருந்த நிலையில், பெரி 4,349 ஓட்டங்களைப் பெற்றதோடு 213 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான விருதையும் கோலி வென்ற நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான விருதை அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தும், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான விருதை ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் பெற்றிருந்தார்.
இந்நிலையில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான விருதையும் எலைஸ் பெரியே பெற்றிருந்தார்.
துணைக்கண்ட கிரிக்கெட் வீரருக்கான விருதை ஸ்கொட்லாந்தின் கைல் கொயட்ஸியரும், வீராங்கனைக்கான விருதை ஸ்கொட்லாந்தின் கேத்தரின் பிறைஸும் பெற்றிருந்தனர்.
இதேவேளை, சர்சைக்குரிய ரண் அவுட்டொன்றையடுத்து இங்கிலாந்தின் இயன் பெல்லை மீண்டும் துடுப்பெடுத்தாட அழைத்த இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோணிக்கு சிறந்த நன்னடத்தைக்கான விருது கிடைத்திருந்தது.
இ-20 ச.போ அணி: ரோஹித் ஷர்மா, கிறிஸ் கெய்ல், ஆரோன் பின்ஞ், விராட் கோலி, ஏ.பி டி வில்லியர்ஸ், கிளென் மக்ஸ்வெல், மகேந்திர சிங் டோணி (அணித்தலைவர்), கெரான் பொலார்ட், ரஷீட் கான், ஜஸ்பிரிட் பும்ரா, லசித் மலிங்க.
ஒ.ச.போ. அணி: ரோஹித் ஷர்மா, டேவிட் வோணர், விராட் கோலி, ஏ.பி டி வில்லியர்ஸ், ஷகிப் அல் ஹஸன், மகேந்திர சிங் டோணி (அணித்தலைவர்), பென் ஸ்டோக்ஸ், மிற்செல் ஸ்டார்க், ட்ரெண்ட் போல்ட், இம்ரான் தாஹீர், லசித் மலிங்க.
டெஸ்ட் அணி: அலிஸ்டயர் குக், டேவிட் வோணர், கேன் வில்லியம்ஸன், விராட் கோலி (அணித்தலைவர், ஸ்டீவ் ஸ்மித், குமார் சங்கக்கார (விக்கெட் காப்பாளர்), பென் ஸ்டோக்ஸ், இரவிச்சந்திரன் அஷ்வின், டேல் ஸ்டெய்ன், ஸ்டூவர்ட் ப்ரோட், ஜேம்ஸ் அன்டர்சன்.
பெண்களின் ஒ.ச.போ. அணி: அலைஸா ஹீலி, சுஸி பேட்ஸ், மிதாலி ராஜ், மெக் லன்னிங்க் (அணித்தலைவி), ஸ்டெபனி டெய்லர், சரா டெய்லர் (விக்கெட் காப்பாளர்), எலைஸ் பெரி, டேன் வான் நிக்கெரெக், மரிஸனே கப், ஜுலன் கோஸ்வாமி, அனிஷா மொஹமட்.
பெண்களின் இ-20 ச.போ. அணி: அலைஸா ஹீலி, சோபி டெவின், சுஸி பேட்ஸ், மெக் லன்னிங்க் (அணித்தலைவி), ஹர்மன்பிறீட் கெளர், ஸ்டெபனி டெய்லர், தெயேந்திர டொட்டின், எலைஸ் பெரி, அன்யா ஷெர்ஷோபிள், மேகன் ஸ்கட், பூனம் யாதவ்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
25 minute ago
30 minute ago