2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பயிற்சிப் போட்டியில் நெதர்லாந்திடம் தோற்ற இலங்கை

Shanmugan Murugavel   / 2024 மே 29 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகளில், ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற நெதர்லாந்துக்கெதிரான போட்டியில் இலங்கை தோற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நெதர்லாந்து, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், மிஷெல் லெவிட் 55, அணித்தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் ஆட்டமிழக்காமல் 27, டெஜா நிடமனுரு 27 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் டுனித் வெல்லலாகே 4-0-26-1, சரித் அசலங்க 1-0-5-0, தசுன் ஷானக 2-0-12-0, கமிந்து மென்டிஸ் 2-0-15-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

உலகக் கிண்ணத் தொடரின் குழுநிலைப் போட்டியிலும் நெதர்லாந்தை இலங்கை எதிர்கொள்ளவுள்ள நிலையில், அணித்தலைவர் வனிடு ஹசரங்க, மகேஷ் தீக்‌ஷன ஆகியோர் பந்துவீசியிருக்கவில்லை.

பதிலுக்கு 182 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஹசரங்க 43 (15), ஷானக ஆட்டமிழக்காமல் 35 (20), தனஞ்சய டி சில்வா 31 (22) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அர்யன் டுட் 3, கைல் கிளெய்ன் 2, லோகன் வான் பீக் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .