2025 ஜூலை 05, சனிக்கிழமை

பரிஸ் ஸா ஜெர்மைனில் இகார்டி

Editorial   / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது முன்களவீரரான மெளரோ இகார்டி, ஓராண்டு கடனடிப்படையில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனில் இணைந்துள்ளதாக இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் நேற்று  தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த கடன் ஒப்பந்தமானது இன்டர் மிலனுடனான ஆர்ஜென்டீனா சர்வதேச கால்பந்தாட்ட அணியினதும் வீரரன மெளரோ இகார்டியின் ஒப்பந்தத்தை 2022ஆம் ஆண்டு வரை இரண்டாண்டுகளால் நீடித்தும் உள்ளதாக இன்டர் மிலன் கூறியுள்ளது.

இந்நிலையில், தமது முன்னாள் அணித்தலைவரான மெளரோ இகார்டியை நிரந்தரமாக, ஓராண்டு கடன் ஒப்பந்தத்தின் பிற்பாடு பரிஸ் ஸா ஜெர்மைன் கைச்சாத்திடக்கூடிய தெரிவும் குறித்த ஒப்பந்தத்தில் காணப்படுவதாக அறிக்கையொன்றில் இன்டர் மிலன் தெரிவித்துள்ளது.

இன்னொரு இத்தாலிய சீரி ஏ கழகமான சம்ப்டோரியாவிலிருந்து 2013ஆம் ஆண்டில் இன்டர் மிலனில் இணைந்த மெளரோ இகார்டி, அவ்வணிக்காக 219 போட்டிகளில் விளையாடி 124 கோல்களைப் பெற்றிருந்தார்.

புதிய ஒப்பந்தம் தொடர்பான பேரம்பேசல்களில் இழுபறி காரணமாக இவ்வாண்டு பெப்ரவரியில் இன்டர் மிலனின் அணித்தலைவர் பதவியிலிருந்து மெளரோ இகார்டி நீக்கப்பட்டிருந்த நிலையில், முழங்கால் காயமொன்று காரணமாக தன்னால் விளையாட முடியாது எனத் தெரிவித்திருந்தார். எவ்வாறெனினும், மருத்துவப் பரிசோதனையொன்றின்போது எதுவும் தவறாக இல்லை என இன்டர் மிலன் கூறியிருந்தது.

இதேவேளை, ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் கோல் காப்பாளரான கெய்லர் நவாஸை நான்காண்டு ஒப்பந்தமொன்றில் பரிஸ் ஸா ஜெர்மைன் கைச்சாத்திட்டுள்ளதுடன், கடனடிப்படையில் பரிஸ் ஸா ஜெர்மைனின் கோல் காப்பாளர் அல்போன்ஸ் அரியாலா றியல் மட்ரிட்டுக்குச்  செல்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .