2025 மே 21, புதன்கிழமை

‘பரிஸ் ஸா ஜெர்மைனுக்குச் செல்லும் சாத்தியம் இருக்கிறது’

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனில் இணையும் சாத்தியம் ஒன்று இருப்பதாக, ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் முன்னாள் அணித்தலைவரான லியனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

எனினும், எதுவும் இணங்கப்படவில்லை என பார்சிலோனாவின் முன்னாள் முன்களவீரரான மெஸ்ஸி கூறியுள்ளார்.

பார்சிலோனாவிலிருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்தும்போதே குறித்த கருத்தை 34 வயதான மெஸ்ஸி வெளிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறெனினும், ஓராண்டுத் தெரிவு ஒன்று உடனான இரண்டாண்டு ஒப்பந்தத்துக்கு, பரிஸ் ஸா ஜெர்மைனுடன் ஆர்ஜென்டீனாவின் சர்வதேச கால்பந்தாட்ட அணியின் தலைவரான மெஸ்ஸி இணங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

லா லிகாவின் ஊதியக் கட்டுப்பாடு காரணமாக ஆர்ஜென்டீனா சர்வதேச கால்பந்தாட்ட அணியின் முன்களவீரரான மெஸ்ஸியுடனான ஒப்பந்தத்தை பார்சிலோனா பூர்த்தி செய்ய முடியாமல் போயிருந்தது.

அந்தவகையில், பார்சிலோனாவுடனான தனது 21 ஆண்டுத் தொடர்பை மெஸ்ஸி முடித்துக் கொண்டிருந்தார்.

தனது 13ஆவது வயதில் ஆர்ஜென்டீனாவிலிருந்து ஸ்பெய்னுக்குச் சென்ற மெஸ்ஸி, தனது 17ஆவது வயதில் கடந்த 2004ஆம் ஆண்டு ஒக்டோபரில் பார்சிலோனாவில் அறிமுகமாயிருந்தார். பார்சிலோனாவுக்காக 778 போட்டிகளில் 672 கோல்களைப் பெற்ற மெஸ்ஸி, 34 கிண்ணங்களை பார்சிலோனா வெல்ல உதவியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .