2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பலூன் டி ஓர் விருதுப் பட்டியலில் நெய்மர், மோட்ரிட்ச் இல்லை

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுச் சஞ்சிகையான பலூன் டி ஓர் விருதுப் பட்டியலில் பிரெஞ்சு லீக் 1 கழகத்தினதும், பிரேஸில் சர்வதேச கால்பந்தாட்ட அணியினதும் முன்களவீரரான நெய்மர், கடந்தாண்டு விருந்தை வென்ற ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டினதும், குரோஷியா சர்வதேச கால்பந்தாட்ட அணியினதும் மத்தியகளவீரரான லூகா மோட்ரிட்ச் ஆகியோர் இடம்பெறவில்லை.

இந்நிலையில், ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவினதும் ஆர்ஜென்டீனா சர்வதேச கால்பந்தாட்ட அணியினதும் முன்களவீரரான லியனல் மெஸ்ஸி, இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸினதும் போர்த்துக்கல் சர்வதேச கால்பந்தாட்ட அணியினது முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலினதும் நெதர்லாந்து சர்வதேச கால்பந்தாட்ட அணியின் பின்களவீரரான வேர்ஜில் வான் டிஜிக் ஆகியோர் குறித்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை, பெண்களுக்கான பட்டியலில் ஐக்கிய அமெரிக்க சர்வதேச கால்பந்தாட்ட அணியின் முன்களவீராங்கனைகளான மேகன் றபினோ, அலெக்ஸ் மோர்கன் மற்றும் கடந்தாண்டு விருதை வென்ற நோர்வே சர்வதேச கால்பந்தாட்ட அணியின் முன்களவீராங்கனையான அடா ஹெகெர்பேர்க் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .