Editorial / 2019 நவம்பர் 14 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

பத்தாண்டுகளில் முதற்தடவையாக, இலங்கைக்கெதிராக அடுத்த மாதம் டெஸ்ட் தொடர் ஒன்றை பாகிஸ்தான் நடாத்தவுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, ராவல்பின்டியில் அடுத்த மாதம் 11ஆம் திகதி முதலாவது டெஸ்டுடன் ஆரம்பிக்கவுள்ளது. இரண்டாவது டெஸ்ட்டானது கராச்சியில் அடுத்த மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
ஆரம்பத்தில், டெஸ்ட் தொடரானது இவ்வாண்டு ஒக்டோபர் மாதத்திலும், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித் தொடர்கள் அடுத்த மாதமும், பாகிஸ்தானுக்கு இலங்கை வீரர்கள் செல்ல மறுத்த நிலையில் பொதுவான இடம்மொன்றில் விளையாடுவதாக இருந்தது.
எனினும், முழுத் தொடரையும் பாகிஸ்தானில் விளையாடுமாறு இலங்கையைக் கோரியிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, அதியுயர் மட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், பாகிஸ்தான் மேற்கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு சோதனையொன்றாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித் தொடர்கள் முதலில் பாகிஸ்தானில் விளையாடப்பட்டிருந்தன.
அந்தவகையில், குறித்த சுற்றுப்பயணம் வெற்றியளித்ததைத் தொடர்ந்து மீண்டும் பாகிஸ்தானில் விளையாடுவதற்கு தற்போது இலங்கை இணங்கியுள்ளது.
பாகிஸ்தானுக்கான இவ்வாண்டு செப்டெம்பர் மாத சுற்றுப்பயணத்தில் இலங்கை முன்னணி வீரர்கள் பங்கெடுத்திருக்காத நிலையில், லாகூர், கராச்சியில் நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித் தொடர்களுக்கு இரண்டாம் தர அணியொன்றையே இலங்கை கிரிக்கெட் சபையால் அனுப்ப முடிந்திருந்தது.
இறுதியாக இலங்கையே பாகிஸ்தானில் டெஸ்ட்களை விளையாடியிருந்தது. லாகூரில் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கையணியின் பஸ் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலாலேயே பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் முடிவுக்கு வந்திருந்தது.
4 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
27 Jan 2026