2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாகிஸ்தானுக்கு 9 விக்கெட்டுகள் தேவை

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரைச் சமப்படுத்துவதற்கு தொடரின் இறுதி நாளில் ஒன்பது விக்கெட்டுகளை பாகிஸ்தான் கைப்பற்ற வேண்டியுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் மே. தீவுகள் வென்ற நிலையில், ஜமைக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த இந்த இரண்டாவது டெஸ்டில் வென்றால்தான் தொடரை பாகிஸ்தான் சமப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மே. தீவுகள்

பாகிஸ்தான்: 302/9 (துடுப்பாட்டம்: பவாட் அலாம் ஆ.இ 124, பாபர் அஸாம் 75, மொஹமட் றிஸ்வான் 31, பாஹீம் அஷ்ரஃப் 26, ஷகீன் ஷா அஃப்ரிடி 19 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேடன் சியல்ஸ் 3/31, கேமார் றோச் 3/68, ஜேஸன் ஹோல்டர் 2/46)

மே. தீவுகள்: 150/10 (துடுப்பாட்டம்: என்குறுமாஹ் பொன்னர் 37, ஜெர்மைன் பிளக்வூட் 33, ஜேஸன் ஹோல்டர் 26, றொஸ்டன் சேஸ் 10 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 6/51, மொஹமட் அப்பாஸ் 3/44, பாஹீம் அஷ்ரஃப் 1/14)

பாகிஸ்தான்: 176/6 (துடுப்பாட்டம்: இம்ரான் பட் 37, பாபர் அஸாம் 33, அபிட் அலி 29, அஸார் அலி 22, ஹஸன் அலி 17, மொஹமட் றிஸ்வான் ஆ.இ 10, பாஹீம் அஷ்ரஃப் 09 ஓட்டங்கள். பந்துவீச்சு: அல்ஸாரி ஜோசப் 2/24, ஜேஸன் ஹோல்டர் 2/27, கிரேய்க் பிறத்வெய்ட் 1/28, கைல் மேயர்ஸ் 1/43)

மே. தீவுகள்: 49/1 (துடுப்பாட்டம்: கிரண் பவல் 23, கிரேய்க் பிறத்வெய்ட் ஆ.இ 17, அல்ஸாரி ஜோசப் ஆ.இ 08 ஓட்டங்கள்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .