2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானுக்கெதிராக 181 ஓட்டங்களைப் பெற்ற இந்தியா

Shanmugan Murugavel   / 2022 செப்டெம்பர் 04 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் தற்போது நடைபெற்றுவரும் பாகிஸ்தானுக்கெதிரான ஆசியக் கிண்ண சுப்பர் 4 சுற்றுப் போட்டியொன்றில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் பாபர் அஸாம், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அணித்தலைவர் றோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் மூலம் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்ற இந்தியா, ஷர்மாவை 28 (16) ஓட்டங்களுடனும், ராகுலை 28 (20) ஓட்டங்களுடன் அடுத்தடுத்த ஓவர்களில் ஹரிஸ் றாஃப், ஷடாப் கானிடம் வீழ்ந்தனர்.

குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் மொஹமட் நவாஸிடம் சூரியகுமார் யாதவ்வும், தொடர்ந்து அடுத்தடுத்த ஓவர்களில் றிஷப் பண்ட், ஹர்டிக் பாண்டியா ஆகியோர் ஷடாப் கான், மொஹமட் ஹஸ்னைனிடம் வீழ்ந்தனர். குறித்த நேரத்தின் பின்னர் நசீம் ஷாவிடம் தீபக் ஹூடாவும் வீழ்ந்திருந்தார்.

இந்நிலையில் நிலைத்து நின்று இறுதி ஓவரில் ரண் அவுட்டான விராட் கோலியின் 60 (44) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை இந்தியா பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X