2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2023 மே 08 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்து வென்றது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் நான்கு போட்டிகளையும் வென்ற பாகிஸ்தான் தொடரை ஏற்கெனவே கைப்பற்றிய நிலையில், கராச்சியில் நேற்று நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் அணித்தலைவர் டொம் லேதம், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, வில் யங்கின் 87 (91), லேதமின் 59 (58), மார்க் சப்மனின் 43 (33), றஷின் ரவீந்திராவின் 28 (20), கோல் மக்கொஞ்சியின் 26 (25) ஓட்டங்களோடு 49.3 ஓவர்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஷகீன் ஷா அப்ரிடி 3, உஸாமா மிர், ஷடாப் ஆகியோர் தலா 2, மொஹமட் வாஸிம் மற்றும் ஹரிஸ் றாஃப் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பதிலுக்கு 300 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 46.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 252 ஓட்டங்களையே பெற்று 47 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், இஃப்திஹார் அஹ்மட் ஆட்டமிழக்காமல் 94 (72), அக்ஹா சல்மான் 57 (57) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஹென்றி ஷிப்லி, றஷின் றவீந்திரா ஆகியோர் தலா 3 மற்றும் அடம் மில்ன், மற் ஹென்றி, இஷ் சோதி தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இப்போட்டியின் நாயகனாக ஷிப்லி தெரிவானதோடு, தொடரின் நாயகனாக பக்கர் ஸமன் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .