2025 ஜூலை 03, வியாழக்கிழமை

பாகிஸ்தானை வெல்லுமா பங்களாதேஷ்?

Editorial   / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரானது நாளை ஆரம்பிக்கின்றது.

இரண்டு அணிகளுக்குமிடையிலான இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது ராவல்பின்டியில் நாளை காலை 10.30 ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

அந்தவகையில், 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளை விளையாட ஆரம்பித்துள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் ஏழாமிடத்தில் காணப்படும் பாகிஸ்தானை, ஒன்பதாவது இடத்திலுள்ள பங்களாதேஷ் வெல்வதற்கு மிகுந்த அர்ப்பணிப்பை வழங்க வேண்டியுள்ளது.

அதுவும் பங்களாதேஷின் சிறந்த துடுப்பாட்டவீரரான முஷ்பிக்கூர் ரஹீம் இத்தொடரில் பங்கேற்காத நிலையில் மிகுந்த சிக்கலை பங்களாதேஷ் எதிர்கொள்கின்றது.

ஆக, அணித்தலைவர் மொமினுல் ஹக், சிரேஷ்ட வீரர்கள் மகமதுல்லா, தமிம் இக்பால், இளம் வீரர்கள் லிட்டன் தாஸ், மொஹமட் மிதுன் ஒன்றிணைந்து தொடர்ச்சியான பெறுபேறுகளைப் பெற வேண்டியவர்களாக உள்ளனர். அண்மைக்கால டெஸ்ட்களில் மகமதுல்லாவின் பங்களிப்புகள் இல்லை என்ற நிலையில், இன்னுமொரு அவரின் பின்னடைவு அவரின் இடத்தை அணியில் கேள்விக்குறியாக்கும்.

பந்துவீச்சுப் பக்கம் அபு ஜயெட், எபடட் ஹொஸைன், தஜியுல் இஸ்லாமுடன் அல்-அமின் ஹொஸைனுடன் பங்களாதேஷ் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக, சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்தி நம்பிக்கையுடன் பாகிஸ்தான் அணியில் பெரும்பாலும் மாற்றமிருக்காது என்றே கருதப்படுகிறது. குழாமுக்கு, பங்களாதேஷின் இடதுகை துடுப்பாட்டவீரர்களை கருத்திற்கொண்டு சுழற்பந்துவீச்சாளர் பிலால் ஆசிஃப், சகலதுறைவீரர் ஃபாஹீம் அஷ்ரப் ஆகியோர் அழைக்கப்பட்டபோதும் இலங்கையுடனான இரண்டாவது டெஸ்டில் களமிறங்கிய அதேயணியே களமிறங்கும் எனத் தெரிகிறது.

எவ்வாறெனினும், குழாமில் பவட் அலம், பிலால் ஆசிஃப் ஆகியோர் காணப்படுகின்ற நிலையில் முறையே ஹரீஸ் சொஹைல், யசீர் ஷா ஆகியோர் பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டிய அழுத்தத்தில் காணப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .