Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 21 , மு.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியில், பிரெஞ்சு லீக் 1 கழகமான, லயோன் அணியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது சுற்றுப் போட்டியை சமநிலையில், ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா முடித்துள்ளது.
இலங்கை நேரப்படி, நேற்று அதிகாலை இடம்பெற்ற குறித்த போட்டியில் கோல் பெறுவதற்கான 25 உதைகளை பார்சிலோனா கொண்டிருந்தபோதும், அதில் எதையுமே பார்சிலோனா கோலாக்கியிருக்காத நிலையில் 0-0 என்ற கோல் கணக்கில் இப்போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.
வழமையாக பார்சிலோனாவுக்காக கோல் மழை பொழியும் அவ்வணியின் நட்சத்திர முன்கள வீரர்களான லியனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸ், பிலிப் கோச்சினியோ என அனைவரினது உதைகளும் லயோனின் கோல் காப்பாளர் அன்டோனி லொபேஸால் தடுக்கப்பட்டிருந்தன.
இப்போட்டியில், தடையை எதிர்கொண்டிருந்த லயோனின் அணித்தலைவரும் முன்கள வீரருமான நபில் பெகிர் பங்கேற்கவில்லையென்ற நிலையில், பார்சிலோனாவின் மைதானத்தில், அடுத்த மாதம் 13ஆம் இடம்பெறவுள்ள இரண்டாவது சுற்றுப் போட்டியில் அவர் பங்கேற்கவுள்ளார்.
இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற, ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சுடனான இறுதி 16 அணிகளுக்கிடையிலான முதலாவது சுற்றுப் போட்டியை, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல், சமநிலையில் முடித்துக் கொண்டது.
இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற குறித்த போட்டியில், முன்களத்தில் லிவர்பூல் சிறப்பாக செயற்பட்டிருந்தாலும், உறுதியான பயேர்ண் மியூனிச்சின் பின்களம் காரணமாக, 0-0 என்ற கோல் கணக்கில் இப்போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago