2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பார்சிலோனாவிலிருந்து விலகும் பிஜானிச்?

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 05 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனா, தமது மத்தியகள வீரரான மிரலெம் பிஜானிச்சை விடுவிக்கத் தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது,

பார்சிலோனாவின் முகாமையாளரான றொனால்ட் கூமனின் திட்டங்களில் 31 வயதான பிஜானிச்சும் பின்களவீரரான சாமுவேல் உம்டிட்டியும் இல்லாத நிலையிலேயே இருவரையும் விடுவிக்க பார்சிலோனா தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரில் பிஜானிச் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் நீண்ட காலமாக பிஜானிச்சை ஒப்பந்தம் செய்ய விருப்பம் காட்டியிருந்ததுடன், இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனும் அவரைக் கைச்சாத்திட விருப்பம் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .