2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பார்சிலோனாவை எதிர்கொள்ளும் பரிஸ் ஸா ஜெர்மைன்

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்க ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், இறுதி 16 அணிகளுக்கான விலகல் சுற்றில், ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவை பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் எதிர்கொள்ளவுள்ளது

இன்று இடப்பட்ட அட்டவணையின்படியே இவ்வாறு மோதல் நிகழவுள்ளது.

இதேவேளை, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியானது இன்னொரு லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டை எதிர்கொள்ளது.

ஜேர்மனிய புண்டெஸ்லீகா கழகமான பொரூசியா டொட்டமுண்டானது இன்னொரு லா லிகா கழகமான செவில்லாவை எதிர்கொள்ளவுள்ளது.

நடப்புச் சம்பியன்களும் இன்னொரு புண்டெஸ்லீகா கழகமான பயேர்ண் மியூனிச், இத்தாலிய சீரி ஏ கழகமான லேஸியோவை எதிர்கொள்ளவுள்ளது.

இதவிர, இன்னொரு புண்டெஸ்லீகா கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக்கானது, இன்னொரு பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலை எதிர்கொள்ளது.

இதேவேளை, இன்னொரு லா லிகா கழகமான றியல் மட்ரிடை இன்னொரு சீரி ஏ கழகமான அத்லாண்டா எதிர்கொள்ளவுள்ளது.

தவிர, இன்னொரு புண்டெஸ்லீகா கழகமான பொரூசியா மொச்சென்கிளெட்பாவை இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி எதிர்கொள்கின்றது.

இந்நிலையி, இன்னொரு சீரி ஏ கழகமான ஜுவென்டஸை போர்த்துக்கல் கழகமான போர்ட்டோ எதிர்கொள்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .