2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பின்னாலிருந்து வந்து லேஸியோவை வென்றது ஜுவென்டஸ்

Editorial   / 2019 ஜனவரி 28 , பி.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், லேஸியோ அணியின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில், இறுதி நேரத்தில் தமதணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்ற கோல் காரணமாக ஜுவென்டஸ் வென்றது.

இப்போட்டியின் முதற்பாதியில் லேஸியோவின் முன்கள வீரர் லூயிஸ் அல்பேர்ட்டோவின் உதையைத் தடுத்திருந்த ஜுவென்டஸின் கோல் காப்பாளர் வொஜெக் ஸ்டட்ஸே, லேஸியோவின் மத்தியகள வீரர் மார்கோ பரோலோவின் உதையை ஒரு கையால் அபாரமாகத் தடுத்திருந்தார். இதுதவிர, லேஸியோவின் முன்கள வீரர் சிரோ இம்மொபைலின் உதையை ஜுவென்டஸின் பின்கள வீரர் டேனியல் றூகனி தடுத்திருந்த நிலையில் முதற்பாதியில் லேஸியோ ஆதிக்கம் செலுத்தியபோதும் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இரண்டாவது பாதியில் 59ஆவது நிமிடத்தில், லூயிஸ் அல்பேர்டோவின் மூலையுதையை, ஜுவென்டஸின் மத்தியகள வீரர் எம்ரே கான் எதிர்பாராதவிதமாக தமது கோல் கம்பத்துக்குள்ளேயே தலையால் செலுத்த லேஸியோ முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து, சிரோ இம்மொபைலின் உதையொன்று கோல் கம்பத்துக்கு மேலால் சென்றிருந்தது.

இந்நிலையில், ஜுவென்டஸின் முன்கள வீரரான போலோ டிபாலாவின் உதையை, லேஸியோவின் கோல் காப்பாளர் தோமஸ் ஸ்டாகோஷா தடுக்க அதை ஜுவென்டஸின் ஜோன் கான்செலோ போட்டியின் 74ஆவது நிமிடத்தில் கோலாக்க ஜுவென்டஸ் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தியது.

தொடர்ந்து, ஜுவென்டஸின் பெடெரிக்கோ பேர்ணான்டெஷி பெனால்டி பகுதிக்குள் பந்தைச் செலுத்த, லேஸியோவின் செனாட் லூலிக்குடன் தொடுகையுற்ற ஜோன் கான்செலோ விழ வழங்கப்பட்ட பெனால்டியை போட்டி முடிவடைய இரண்டு நிமிடங்களிருக்கையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக்க இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் வென்றது.

இதேவேளை, டொரினோ அணியின் மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் அவ்வணி இன்டர் மிலன் அணியை வென்றிருந்தது. டொரினோ அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை அர்மாண்டோ இஸோ பெற்றார்.

இந்நிலையில், அத்லாண்டா அணியின் மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-3 என்ற கோல் கணக்கில் றோமா சமநிலையில் முடித்திருந்தது.

சீரி ஏ அணிகளின் புள்ளிகள் பட்டியல் பின்வருமாறு,

  1. ஜுவென்டஸ் 59 புள்ளிகள்
  2. நாப்போலி 48 புள்ளிகள்
  3. இன்டர் மிலன் 40 புள்ளிகள்
  4. ஏ.சி மிலன் 35 புள்ளிகள்
  5. றோமா 34 புள்ளிகள்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .