2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பிரபல ஒலிம்பிக் வீராங்கனை கார் விபத்தில் மரணம்

Editorial   / 2023 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடா தேசத்தின் ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட்டு நட்சத்திரமான அலெக்சாண்ட்ரா பால் என்ற வீராங்கனை, மோசமான கார் விபத்தில் சிக்கி பலியானார். அவருக்கு வயது 31.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் பிரதான விளையாட்டான ஐஸ் ஸ்கேட்டிங்கில் கனடா சார்பாக கலந்து கொண்டு வெற்றிகளைக் குவித்தவர் அலெக்ஸாண்ட்ரா பால். ஐஸ் ஸ்கேட்டிங் பார்ட்னரும், தனது கணவருமான மிட்செல் இஸ்லாம் உடன் இணைந்து அலெக்ஸாண்ட்ரா பால் நடத்திய ஐஸ் ஸ்கேட்டிங் துரிதங்களும், நடன அசைவுகளும் பிரசித்தி பெற்றவை.

ரஷ்யாவில் 2014ல் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஐஸ் ஸ்கேட்டிங்கில் மிட்ச்செல் இஸ்லாம் உடன் இவர் பங்கேற்றதும், வென்றதுமாக சர்வதேச அளவில் கவனம் பெற்றார். அவரை பின்தொடர்ந்து கனடா யுவதிகள் பலரும் ஐஸ் ஸ்கேட்டிங்கில் ஆர்வமாக அலெக்ஸாண்ட்ரா காரணமானார்.

முழுநேர ஐஸ் ஸ்கேட்டிங்கில் இருந்து 2016ல் தனது ஓய்வை அறிவித்த போதும், கனடா விளையாட்டு உலகில் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வந்தார். இதனிடையே கனடாவின் ஒன்டாரியோவில் நிகழ்ந்த மோசமான கார் விபத்தில் கடந்த செவ்வாயன்று அலெக்ஸாண்ட்ரா சிக்கினார். கட்டுப்பாட்டை இழந்த டிரக் ஒன்று அடுத்தடுத்து 7 கார்கள் மீது மோதியதில் அலெக்ஸ்ண்ட்ரா படுகாயம் அடைந்தார். மகனின் உடல் நலக்குறைவு காரணமாக சிறுவனுடன் மருத்துவனைக்கு அலெக்ஸாண்ட்ரா காரில் விரைந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்தில் படுகாயமடைந்த அலெக்ஸாண்ட்ரா பின்னர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பலியானார். அவரது மரணத்துக்கு கனடா மற்றும் சர்வதேச ஐஸ் ஸ்கேட்டிங் கூட்டமைப்புகளும், சக வீரர்கள் மற்றும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X