Shanmugan Murugavel / 2026 மார்ச் 02 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற செல்சியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.
ஆர்சனல் சார்பாக வில்லியம் சலிபா, ஜூரியன் டிம்பர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
இதேவேளை புல்ஹாமின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது. டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை றிஷலிஷன் பெற்றார். புல்ஹாம் சார்பாக ஹரி வில்சன், அலெக்ஸ் இவோபி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றார்.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 64 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் உள்ளது. 59 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றி உள்ளது. மன்செஸ்டர் யுனைட்டெட்டும் அஸ்தன் வில்லாவும் தலா 51 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் மூன்றாம், நான்காமிடங்களில் காணப்படுகின்றன.
1 hours ago
02 Mar 2026
02 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
02 Mar 2026
02 Mar 2026