2025 ஜூலை 05, சனிக்கிழமை

புண்டெலிஸ்கா தொடர்: சமநிலையில் பயேர்ண் – அகஸ்பேர்க் போட்டி

Editorial   / 2019 ஒக்டோபர் 20 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், அகஸ்பேர்க்கின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை சமநிலையில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் முடித்துக் கொண்டது.

பயேர்ண் மியூனிச் சார்பாக, றொபேர்ட் லெவன்டோஸ்கி, சேர்ஜி நர்பி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர். அகஸ்பேர்க் சார்பாக, மக்ரோ றிச்சர், அல்ஃபெரோயோ ஃபின்பொகொஸன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற மொச்சென்கிளெட்பாவுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பொரூசியா டொட்டமுண்ட் வென்றிருந்தது. பொரூசியா டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்கோ றொய்ஸ் பெற்றிருந்தார்.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் தலா 15 புள்ளிகளுடன் பயேர்ண் மியூனிச்சும், பொரூசியா டொட்டமுண்டும் காணப்படுகின்றபோதும், கோலெண்ணிக்கை அடிப்படையில் பயேர்ண் மியூனிச் மூன்றாமிடத்திலும், பொரூசியா டொட்டமுண்ட் நான்காமிடத்திலும் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .