2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

புதிய ஐந்தாண்டு ஒப்பந்தத்துக்கு இணங்கிய கூன்டே

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 31 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவுடன் எதிர்வரும் 2030ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் ஒப்பந்த நீடிப்பொன்றுக்கு தான் இணங்கியுள்ளதாக அக்கழகத்தின் பின்களவீரர் ஜூலெஸ் கூன்டே புதன்கிழமை (30) வெளிப்படுத்தியுள்ளார்.

26 வயதான கூன்டேயின் தற்போதைய ஒப்பந்தமானது எதிர்வரும் 2027ஆம் ஆண்டு முடிவடைவதாகக் காணப்பட்டிருந்தது.

கடந்த 2022ஆம் ஆண்டு பார்சிலோனாவில் இணைந்த கூன்டே 141 போட்டிகளில் விளையாடி ஏழு கோல்களைப் பெற்றதுடன், 18 கோல்களைப் பெற உதவியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .