Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸின் முன்களவீரரான போலோ டிபாலாவுக்கு, ஜுவென்டஸானது புதிய ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக அக்கழகத்தின் தலைவர் அன்ட்ரியா அக்னெல்லி தெரிவித்துள்ளார்.
முன்னதாக தான் இன்னும் ஒப்பந்தமொன்றைப் பெறவில்லை என டிபாலா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போதைய 2022ஆம் ஆண்டு வரையான ஒப்பந்தத்தை தாண்டி ஒப்பந்தத்தை நீடிக்கும் வாய்ப்பை வழங்கியதாகவும், ஐரோப்பில் சிறப்பாக ஊதியம் வழங்கப்படும் 20 வீரர்களுக்குள் ஒருவராக டிபாலவை மாற்றுவதாகவும் அக்னெல்லி குறிப்பிட்டிருந்தார்.
ஆர்ஜென்டீனா சர்வதேச அணியினதும் முன்களவீரரான 27 வயதான டிபாலா, 2015ஆம் ஆண்டு ஜுவென்டஸில் இணைந்து 168 போட்டிகளில் 69 கோல்களைப் பெற்றுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
24 minute ago