2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

பும்ரா, பாண்டியாவுக்கு ஓய்வு?

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 29 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின்போது ஹர்திக் பாண்டியாவுக்கும், ஜஸ்பிரிட் பும்ராவுக்கும் ஓய்வளிக்கப்படுமெனத் தெரிகிறது.

ஒரு மாதத்தில் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையிலேயே இவர்களுக்கு ஓய்வளிக்க அணி முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது.

உடற்றகுதிப் பிரச்சினைகளால் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்குப் பின்னர் ஒருநாள் போட்டிகளில் பாண்டியா விளையாடியிருக்காத நிலையில், பும்ரா உலகக் கிண்ணத் தொடருக்குப் பின்னர் விளையாடியிருக்கவில்லை.

எவ்வாறெனினும் உள்ளூர்ப் போட்டிகளில் பங்குபற்ற வேண்டுமென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நிபந்தனைகளின்படி உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் பாண்டியா விளையாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .