2025 மே 02, வெள்ளிக்கிழமை

புலிசிச்சை வட்டமிடும் பிறீமியர் லீக் கழகங்கள்

Shanmugan Murugavel   / 2024 நவம்பர் 19 , பி.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஏ.சி மிலனின் முன்களவீரரான கிறிஸ்டியன் புலிசிச்சைக் கைச்சாத்திட இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களான லிவர்பூல், மன்செஸ்டர் யுனைட்டெட், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மிலனுக்கான சிறப்பாக 26 வயதான புலிசிச் விளையாடி வருகின்ற நிலையில் அவரை இழக்க அக்கழகம் விரும்பாதபோதும் 60 மில்லியன் யூரோக்கள் கிடைக்கப் பெற்றால் கடந்த காலங்களைப் போல பொருத்தமான தொகைக்கு சிறந்த வீரர்களை மிலன் விடுவிக்குமென்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 2027ஆம் ஆண்டு வரையில் மிலனுடன் புலிசிச் ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கிறாரென்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X