Shanmugan Murugavel / 2020 நவம்பர் 10 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 கண்காட்சி பெண்களின் இருபதுக்கு – 20 சவால் தொடரில் ட்ரையல்பிளேஸர்ஸ் சம்பியனானது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற சுப்பர்நோவாஸுடனான இறுதிப் போட்டியில் வென்றதன் மூலமே ட்ரையல்பிளேஸர்ஸ் சம்பியனாகியிருந்தது.
இப்போட்டியில் முதலாவதாகத் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ட்ரையல்பிளேஸர்ஸ் சார்பாக அவ்வணியின் அணித்தலைவி ஸ்மிருதி மந்தனா 68 (49) ஓட்டங்களைப் பெற்றபோதும், பூனம் யாதவ், இலங்கையணியின் முன்னாள் தலைவி ஷஷிகலா சிரிவர்தனவிடம் தலா ஒவ்வொரு விக்கெட்டை இழந்ததைத் தொடர்ந்து, றாதா யாதவ்விடம் வரிசையாக 5 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ஓட்டங்களையே அவ்வணி பெற்றது.
பதிலுக்கு, 119 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சுப்பர்நோவாஸ், அவ்வணியின் அணித்தலைவி ஹர்மன்பிறீட் கெளர் 30 (36) ஓட்டங்களைப் பெற்றபோதும், தீப்தி ஷர்மா (2), சல்மா காட்டூன் (3), ராஜேஸ்வரி கையகவாட், ஜுலான் கோஸ்வாமி, சோபி எக்கில்ஸ்டோனின் (1) கட்டுக்கோப்பான பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 102 ஓட்டங்களையே 16 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகியாக ஸ்மிருதி மந்தனாவும், தொடரின் நாயகியாக றாதா யாதவ்வும் தெரிவாகியிருந்தனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago