2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

பெண்களுக்கான குத்துச்சண்டையில் இலங்கைக்கு பதக்கம்

Editorial   / 2018 ஏப்ரல் 11 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்டில் இடம்பெற்றுவரும் 21ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 45-48 கிலோகிராம் எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ள இலங்கையின் குத்துச்சண்டை வீராங்கனை அனுஷா கொடித்துவக்கு, பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் பெண்களுக்கான குத்துச்சண்டையில் இலங்கை சார்பாக பதக்கம் வென்ற முதலாவது வீராங்கனையாக மாறியுள்ளார்.

தனது அரையிறுதிப் போட்டியில், தொழில்முறையிலான குத்துச்சண்டையில் ஐந்து தடவைகள் சம்பியனான மேரி கொம்மை எதிர்கொண்ட அனுஷா கொடித்துவக்கு, நடுவர்களின் ஏகமனதான முடிவில் அவரிடம் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே, நியூசிலாந்தின் தம்சைன் பென்னியுடனிணைந்து வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .