Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 12 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிய போர்மியுலா வண் அணியான பெராரியிலிருந்து இவ்வாண்டு முடிவில் அவ்வணியின் ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் விலகவுள்ளார்.
பெராரிக்கும் ஜேர்மனியின் செபஸ்டியன் வெட்டலுக்குமிடையிலான ஒப்பந்தப் பேச்சுக்களானவை எந்தவொரு இணக்கமுமில்லாமல் முறிவடைந்தைத் தொடர்ந்தே இவ்வாண்டு இறுதியில் பெராரியிலிருந்து செபஸ்டியன் வெட்டல் விலகவுள்ளார்.
அந்தவகையில், 32 வயதான செபஸ்டியன் வெட்டலின் எதிர்காலம் கேள்விக்குறியாகவுள்ளது.
இந்நிலையில், பெராரியில் செபஸ்டியன் வெட்டலைப் பிரதியிட மக்லரென் அணியின் ஸ்பானிய ஓட்டுநரான கார்லோஸ் சைன்ஸ் கருத்திற் கொள்ளப்படுகிறார்.
இதுதவிர பெராரியின் வேறு தெரிவுகளாக றெனோல்ட் அணியின் அவுஸ்திரேலிய ஓட்டுநரான டேனியல் றிச்சியார்டோ, தம்முடன் இணைந்த அல்ஃபா றோமியோ அணியின் இத்தாலிய ஓட்டுநரான அன்டோனியோ ஜியோவினஸி ஆகியோரும் காணப்படுகின்றனர்.
மீளக்கட்டியெழுப்பப்படும் நடவடிக்கையொன்றின் கீழிருக்கும் அணிக்குச் செல்ல நான்கு தடவைகள் போர்மியுலா வண் சம்பியனான செபஸ்டியன் வெட்டல் தயாராக இருப்பார் எனில் மக்லரெனுக்கான தெரிவொன்றாக அவரும் காணப்படுவார்.
கடந்த 2015ஆம் ஆண்டு பெராரி அணியில் செபஸ்டியன் வெட்டல் இணைந்திருந்தார்.
27 minute ago
32 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago
38 minute ago